- Advertisement -
துபாய் நாட்டில் அடிக்கடி நடத்தப்படும் லாட்டரியில் பல மக்கள் கலந்து கொண்டு வருகின்றனர். அதில், சிலருக்கு மிகப் பெரிய பம்பர் பரிசும் விழுந்துள்ளதை நம் அன்றாட வரும் செய்திகளில் காண்கிறோம். அந்த வகையில், தற்போது இந்தியாவைச் சேர்ந்த முகமது ஆதில் கானுக்கு துபாய் லாட்டரியில் பம்பர் பரிசு விழுந்துள்ளது. அதில், அடுத்த 25 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் இந்திய மதிப்பில் ரூ 5.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த பம்பர் பரிசு குறித்து முகமது ஆதில் கான் அவர்கள், ” நான் முதல்முறையாக இதுபோன்ற மிகப்பெரிய பரிசுத்தொகையைத் தான் வென்றுள்ளதாகவும், இதைச் சிறப்பான வழிகளில் முதலீடு செய்ய உள்ளதாக” தெரிவித்துள்ளார்
- Advertisement -