நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளில், லியோவின் தயாரிப்பாளர்கள் அவரது கதாபாத்திரமான ஆண்டனி தாஸின் ஒரு காட்சியை வெளியிட்டனர்.
வீடியோ காட்சியில் சஞ்சய் தத் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் லெதர் ஜாக்கெட்டை அணிந்திருப்பதைக் காட்டுகிறது. ஒரு தொலைபேசி அழைப்பின் போது அவர் சுருட்டு புகைப்பதைக் காணலாம்.
இதற்கிடையில், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக சமீபத்தில் தெரிவித்தோம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். மாஸ்டருக்குப் பிறகு விஜய் மற்றும் லோகேஷ் இணைந்துள்ள இரண்டாவது படத்தை லியோ குறிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கைதி (2019) மற்றும் விக்ரம் (2022) ஆகியோரைக் கொண்ட லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸின் ஒரு பகுதியா இந்தப் படம் என்பதை லியோ தயாரிப்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
இந்தநிலையில் எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், திடீரென லியோ படத்தின் க்ளிம்ஸ் வீடியோ நேற்று வெளியானது. பொதுவாக டீசர், போஸ்டர் என எது வெளியிடுவதாக இருந்தாலும், ட்விட்டரில் அறிவிப்பு வெளியாகும், அல்லது அந்த விஷயம் கசிந்து தகவல்களாவது பரவிவிடும்.ஆனால் இந்த க்ளிம்ஸ் வீடியோவை யாருமே எதிர்ப்பார்க்கவில்லை. இதனை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். நேற்று சஞ்சய் தத்தின் பிறந்தநாள் என்பதால், இந்த வீடியோவில் சஞ்சய் தத்தின் கதாப்பாத்திரத்தின் பெயரை வெளியிட்டுள்ளனர். லியோ படத்தில் சஞ்சய் தத்தின் பெயர் ஆண்டனி தாஸ் என்பது தெரியவந்துள்ளது. இந்த படத்தில் அவரின் கெட்டப் பார்க்கவே மிகவும் மாஸாக இருக்கிறது.
முறுக்கு மீசை மற்றும் தாடியுடன் சிகரெட்டை பிடித்துக்கொண்டு ஸ்டைலாக இருக்கிறார் சஞ்சய் தத். பின்னணி இசையும், அவரின் தோற்றமும் மிரளவைக்கும் படி உள்ளது. இவர் தான் இந்த படத்தின் வில்லன் என்ற தகவல் பரவி வருகிறது. இந்தநிலையில் இந்த க்ளிம்ஸ் வீடியோவில் இருக்கும் குறியீடுகள் குறித்து பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.அந்த க்ளிம்ஸ் வீடியோவின் தொடக்கத்தில், ஒரு கழுகை தான் காட்டுகிறார்கள். ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா முடிந்ததில் இருந்தே, நேற்று முழுவதும், கழுகு காக்கா கதை தான் ஹாட் டாப்பிக். இந்த வீடியோவிலும் கழுகு உள்ளது. மேலும் 2 கேங்ஸ்டர் கும்பல் சந்தித்துக்கொள்ளும் இடம் போன்ற காட்சி உள்ளது. அதன் பிறகு சென்னையில் செட் போட்டு எடுத்த ஷாட், மற்றும் காஷ்மீரில் எடுத்த ஷாட்டை கலந்து ஒரு குட்டி வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
லியோ படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் வருமா என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது. விக்ரம் படத்திலும் கழுகு வரும், இந்த படத்திலும் கழுகை காட்டுகிறார்கள். இதற்கு முன்னர் வெளியான நா ரெடி தான் பாடலில் தாஸ் என்ற வார்த்தை இடம்பெற்றிருக்கும். இந்த படத்தில் சஞ்சய் தத்தின் பெயர் ஆண்டனி தாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் பெயரிலும் தாஸ் வருமா? இருவருக்கும் என்ன தொடர்பு என்பதும் தெரியவில்லை என்று செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.
மேலும் லோகேஷ் கனகராஜுக்கு படத்தை எப்படி சரியாக விளம்பரப்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரிந்திருக்கிறது. படத்தை பற்றி மக்களை பேச வைத்துக்கொண்டே இருக்கிறார். ஒரு பெரிய படத்தை மிக பெரிய படமாக மாற்றும் வித்தை தெரிந்தவர் லோகேஷ் கனகராஜ் என்று அந்த பேட்டியில் செய்யாறு பாலு கூறியுள்ளார்.இந்நிலையில் லியோ படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவலை தயாரிப்பாளர் லலித் தெரிவித்திருக்கிறார். ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “லியோவின் அடுத்த அப்டேட் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும்” என்றார். ஆகஸ்ட் 15ஆம் தேதி அர்ஜுனின் பிறந்தநாள் ஆகும். அவரும் லியோவில் நடித்திருக்கிறார். எனவே சஞ்சய் தத் பிறந்தநாள் அன்று எப்படி அவரது க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியானதோ அதேபோல் ஆகஸ்ட் 15ல் அர்ஜுன் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், பிரியா ஆனந்த், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான் என பெரும் நட்சத்திர பட்டாளமே உள்ளது. இதில் மலையாள நடிகர்களான மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, சாந்தி பிரியா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.