சென்னையில் உள்ள வேலப்பன்சாவடியில் இன்று அதிகாலை, பேருந்து – லாரி ஒன்றுடன் ஒன்று மோதி பெரும் விபத்துக்குள்ளானதில், 2 வாகனங்களும் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. கர்நாடகாவிலிருந்து கோயம்பேடு நோக்கி வந்த A/C பேருந்து வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பேருந்திலிருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்து இறங்கியதால் மயிரிழையில் உயிர் தப்பினர். இந்நிலையில், இந்த விபத்து குறித்துத் தகவலறிந்த பூவிருந்தவல்லி, மதுரவாயல் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அனைத்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாகச் சென்னை- பெங்களூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலாகியுள்ளது.
- Advertisement -