கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட பயங்கர சத்தத்துடன் இன்று (ஜூலை 29) பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வெடி விபத்தில் 4க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்றும், இங்குள்ள பட்டாசு வெடித்துச் சிதறியதால் 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.
அதைப்போல், 10க்கும் மேற்பட்டோர் இந்த வெடி விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வெடி விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் இந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீயை அணைக்க போராடி வருகின்றனர். அதேசமயம், இந்த விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்
- Advertisement -