- Advertisement -
தென்மேற்கு பருவமழை காரணமாகக் கடந்த சில நாட்களாகக் கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வந்தது. மேலும், அங்குள்ள அணைகள் நிரம்பி வந்தால், அந்த அணைகளிருந்து ஒகேனக்கலுக்கு நீர் திறக்கப்பட்டது. பின்னர் அந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் சில தினங்களாக மேட்டூரின் கனஅடி அதிகரித்தது. இதையடுத்து, இந்த அதிகரிப்பால் விவசாயிகளுக்கு விடும் பாசனம் நீரின் அளவும் உயர்த்தியது தமிழக அரசு.
ஆனால், கர்நாடகாவில் தற்போது மழை பெய்வது குறைந்துள்ளதால் கபினி, கேஆர் எஸ் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இந்த இரு அணைகளிலிருந்தும் வினாடிக்கு 9,071 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த தண்ணீர் காவிரியில் தமிழ்நாடு நோக்கிச் செல்கிறது. கடந்த 27ம் தேதி வினாடிக்கு 24,071 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று (ஜூலை 28) அது வினாடிக்கு 9,071 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது எனத் தகவல் வந்துள்ளது
- Advertisement -