- Advertisement -
தற்போதைய திரையுலகில் குண்டாக இருக்கும் நடிகைகளையும் அல்லது ஒல்லியாக வரும் நடிகைகளையும் உருவ கேலி செய்து இணையத்தில் பதிவுகள் வெளியிட்டுக் காயப்படுத்தும் போக்கு நீடித்து வருகிறது. இதனைப் பலர் கண்டித்து இப்படி கேலியைச் செய்பவர்கள் நிறுத்தவில்லை. அந்த வகையில், இந்த உருவக் கேலி போக்கு குறித்து நடிகை ஹீமா குரேஷி அவர்கள், ”திரைப்படங்களை விமர்சிக்கும் பெயரில் சிலர் தனி மனிதர்களை அவதூறாகப் பேசுகிறார்கள்” என்றார்.
மேலும், அவர் ” உங்களுக்குப் படம் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை! படம் பார்ப்பதும், பார்க்காததும் அவர்கள் விருப்பம். ஆனால் ஏன் தனிநபர் தாக்குதலில் ஈடுபடுகிறார்கள்? தனிப்பட்ட நபரை உருவக் கேலி செய்வதோ, அவதூறாகப் பேசவோ வேண்டாம்” எனத் தனது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார். இவர் ரஜினிகாந்துடன் காலா, அஜீத்குமாருடன் வலிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -