கடந்த 2 மாதத்திற்கும் மேல் மணிப்பூரில் இரு சமூகத்தினர்க்கிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வெடித்த வன்முறை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இணையத்தில் 2 குக்கி இன பழங்குடி பெண்களை நிர்வாணமாக இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் பரவி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்குப் பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, இந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து தற்போது அங்குள்ள நிலவரம் குறித்து ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க ‘I.N.D.I.A’ கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று மணிப்பூர் செல்கின்றனர். இன்றும், நாளையும் மாநிலத்தில் கலவர பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளதாகத் தெரிவித்தனர்
- Advertisement -