- Advertisement -
மணிப்பூரில் கடந்த 2 மாதத்திற்கு மேல் இரு பழங்குடி இன சமூகத்திற்கு இடையே நடந்த மோதலால் அம்மாநிலமே பயங்கர வன்முறை வெடித்தது. அதில் 150க்கும் மேற்பட்டோர் பலியானார்கள், பலர் தங்களது வீடு, பொருள் ஆகியவற்றை இழந்தனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் இணையத்தில் 2 குக்கி இன பெண்களை நிர்வாண கோலத்தில் இழுத்துச் செல்லும் காணொளி வெளியானது. இந்த காணொளியால் நாடே கொந்தளித்தது. இந்த கொடூர சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.
இந்த வலியுறுத்தலால், மணிப்பூர் கொடூரம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தார். தற்போது மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ தலையிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. மேலும், இந்த சம்பவம் கடந்த சித்ரவதை மே மாதம் பெண்கள் கொடூரமாகச் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி, ஒருவாரம் ஆன நிலையில் சிபிஐ விசாரணை நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -