- Advertisement -
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் நேற்று முதல் ‘என் மண், என் மக்கள்’ என்ற பாத யாத்திரையைத் தமிழகத்திற்கு வந்த ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். பின் பேசிய அவர், “தமிழ்நாட்டில் இப்போது நடக்கும் அரசு ஊழல் நிறைந்த அரசு. ஒரு அமைச்சர் ஊழல் வழக்கில் சிறையில் இருக்கிறார். ஆனால் அவரை அமைச்சராகத் தொடர வைத்திருக்கிறார்கள். இது வெட்கக் கேடானது” எனத் தமிழக முதல்வர் ஸ்டாலினைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 29) ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் செய்த பின் பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்கள் INDIA என்ற பெயரைக் கொண்ட எதிர்க்கட்சிகள் கூட்டணி குறித்து விமர்சித்துள்ளார். அதில், அவர் “எதிர்க்கட்சிகள் நாட்டை வளர்க்க வேண்டும் என நினைக்கவில்லை. அவர்கள் குடும்பத்தை வளர்க்க வேண்டும் என நினைக்கின்றனர். சோனியா காந்திக்கு ராகுலைப் பிரதமராக்க ஆசை. அதேபோல் தமிழ்நாட்டில் ஸ்டாலினுக்கு உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க ஆசை” எனப் பேசினார்.
- Advertisement -