- Advertisement -
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் இன்று (ஜூலை 29) ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். அதுமட்டுமில்லாமல், சிலர் இந்த விபத்தால் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும், இந்த பட்டாசு குடோனுக்கு அருகில் உள்ள 3 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின
இந்நிலையில், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 3 லட்சமும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், அருகில் உள்ள வீடுகளில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதி உதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அம்மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்
- Advertisement -