- Advertisement -
இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் திமுக கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா அவர்கள் திராவிடம் அறிவோம் என்ற தொகுத்து வெளியிட்டுள்ளார். இதுகுறித்து, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் “நூறாண்டுகள் கடந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், சாதனைகளையும் தன் தன்னிரகற்ற பேச்சாலும் – எழுத்தாலும் எடுத்துரைத்து வரும் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா அவர்கள், திராவிட இயக்கம் தொடர்பான நூல்களை “திராவிடம் அறிவோம்” என்று தொகுத்துள்ளார்கள்” என்றார்.
மேலும், அவர் ” இந்த தொகுப்பு நூலை பங்கேற்றோம். திராவிட இயக்கத்தின் கொள்கைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கிற வகையில் வெளிவந்திருக்கும் இந்த தொகுப்பு, அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்றாகும்” என ட்வீட் செய்துள்ளார்
- Advertisement -