- Advertisement -
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று (ஜூலை 29) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “ தற்போது ராமேஸ்வரம் வந்திருக்கும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொடங்கியது பாத யாத்திரை அல்ல. அது பாவ யாத்திரை. மணிப்பூருக்குச் சென்று ஏன் அமைதி யாத்திரையைத் தொடங்கி வைக்கவில்லை? இந்த குற்றப் பின்னணியில் உள்ளவர்கள்தான் பாஜக அமைச்சரவையில் உள்ளனர்” எனக் கூறினார்.
- Advertisement -