உங்கள் வீட்டில் அமைதி, சாந்தம், லெட்சுமி கடாட்சம் பெற வளர்பிறையில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாமரம் இலைகளில், இலைகளை மட்டும் எடுத்து இடைவெளி விட்டு மஞ்சள் நிற கயிற்றில் கட்டி நிலைவாசலில் அமைந்திருக்கும் நிலைக் கட்டையில் இரண்டு புறமும் முடிச்சு போட்டுக் கட்ட வேண்டும். பின்னர், நீங்கள் உள்ளே செல்லும் போதும் வரும் போதும் உங்கள் தலையில் மாவிலை தட்டாதவாறு கட்ட வேண்டும்.
அப்படி, ஒவ்வொரு மா இலைக்கும் மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். இதைச் சனிக்கிழமை செய்ய வேண்டும். இதையடுத்து இலை காய்ந்த பிறகு திருப்பி மாற்றுவதற்கு அடுத்த மாவிலை தோரணம் செய்து வைத்துக் கொண்டு சனிக்கிழமை தான் மாற்ற வேண்டும். இது சிறந்த வாஸ்து பரிகாரம் ஆகும். இப்படி தோரணம் போடுவதால் உங்கள் வீட்டில் கண் திருஷ்டி படாது, தீய சக்திகள் நெருங்காது, வீட்டில் நேர்மறை ஆற்றலைக் காந்த சக்தி போல் இந்த தோரணம் ஈர்க்கும், செல்வமும் பெருகும் என்பது ஐதீகம்
- Advertisement -