கடந்த 2 மாதத்திற்கும் மேல் நடந்து வரும் மணிப்பூர் கலவரத்தில் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க இரண்டு நாள் பயணமாக, 26 கட்சிகள் சேர்ந்த I.N.D.I.A கூட்டணியின் எம்.பி.க்கள் குழு மணிப்பூர் செல்ல உள்ளது என சற்றுமுன் தகவல் வந்துள்ளது.
இந்த பயணத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மணிப்பூரின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்த முடிவெடுத்துள்ளது.இந்த நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்ட 20 பேர் இந்த குழுவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
- Advertisement -