கடலூரில் என்எல்சி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டு இருந்தார். இதனால், பாமக ஆதரவாளர்கள் காவலர் மீது கல்வீச்சு நடத்தினர். இந்நிலையில், காவலர்கள் இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்தனர். அதேசமயம், இந்த கலவரத்தால் காவலர்கள், பத்திரிகையாளர்கள் உட்படப் பலர் காயமடைந்தனர்
இந்நிலையில், தற்போது தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் நெய்வேலி கலவரம் குறித்து ஆராயப் புறப்பட்டார். அப்போது, அவர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து “நெய்வேலியில் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. போலீசார் மீதும், வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்” எனக் கூறினார்
- Advertisement -