இந்தியாவில் வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடலாம் எனக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி அவர்கள் செய்தியாளர்களைச் சந்திப்பில், “ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
மேலும், அவர் ” பிரதமர் மட்டுமில்லாமல் பல்வேறு தலைவர்கள் இந்த தொகுதியைக் குறிவைத்துள்ளனர். ஆகவே, இந்த தொகுதியில் பிரதமர் உட்பட எந்த தலைவர்கள் போட்டியிட்டாலும்,அதில் அதிமுக தயவை ஏற்கும் கட்சிதான் இங்கு வெற்றி பெறும்” என அதிரடியாக அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி பேசினார்
- Advertisement -