500 ரூபாய் நோட்டுகளில் வரிசை எண்களுடன் நட்சத்திர குறியீடு உள்ள சில நோட்டுகள் செல்லாது என சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில், தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ள ஆர்பிஐ நிர்வாகம், “அச்சிடல் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் திரும்பப் பெறப்பட்டு, அதற்கு மாற்றாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காண நட்சத்திர குறியீடு இடப்பட்டது. மற்ற ரூபாய் நோட்டுகளைப் போல இதுவும் செல்லும்” என்று தெரிவித்துள்ளது.
ஆகவே, ஸ்டார் குறியீடு உள்ள நோட்டுகள் போலியானவை என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி, மக்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
- Advertisement -