பிலிப்பைன்ஸ் நாட்டின் வடபகுதியை ‘டோக்சுரி’ என்ற புயல் பயங்கரமாகத் தாக்கியதில் க்ளவேரியா, பகரா மற்றும் போன்டோக் உள்ளிட்ட பல மாகாணங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், அப்பகுதியில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததால் ஏராளமானோர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
மேலும், இந்த புயலால் சாலைகளில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. அதைப்போல், இந்த பிலிப்பைன்ஸ் நாட்டின் கடலோர பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
- Advertisement -