வடக்கு ஆந்திரா – தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இதனால் வளிமண்டலத்தில் மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் தமிழகம் , புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சற்றுமுன் வானிலை மையம் தெரிவித்தது
- Advertisement -