தங்க நகை வாங்கவும் , அணியவும் வேண்டிய நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களில் பொன் நகை வாங்கி அணிபவர்களை விட்டு ஆயுள்வரை அந்த நகைகள் செல்வதில்லை. வாங்கிய பொன் நகைகளை முதன்முதலில் அணியச் சனிக்கிழமை மிக நல்லது. பொன் நகை வாங்க வேண்டிய நட்சத்திரங்கள் அஸ்வினி, ரோகிணி , மிருகசீரிடம் பூசம், அஸ்தம் சித்திரை, அனுஷம், ரேவதி, ஆகிய எட்டு நட்சத்திரங்களும் பொருத்தமானவை.
மேற்கண்ட எட்டு நட்சத்திரங்களும் பஞ்சமி , சஷ்டி தசமி, ஏகாதசி, பௌர்ணமி ஆகிய திதிகளில் வரும்போது முதன்முதலில் அணியப்படும் நகைகள் பத்து தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும். சுவர்ண லட்சுமி என்றும் குடியிருப்பாள். பொன் நகை தாங்காத தங்கத் தோஷம் விலகும். அடகு போன நகைகளை மீட்டு, மேற்கண்ட நட்சத்திரம், திதிகளில் அணிந்தால் மீண்டும் அந்த நகை அடகுக்குச் செல்லாது.
- Advertisement -