Friday, December 8, 2023 7:37 am

சர்வேதேச உளவாளி !உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் அஜித்தின் விடாமுயற்சி !தெறி அப்டேட் இதோ

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜீத் நடிக்கும் ‘விடாமுயற்சி ‘ திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது, ஆனால் இதுவரை கூடுதல் தகவல் எதுவும் வெளியாகவில்லை.மகிழ் திருமேனி திரைக்கதையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தயாரிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அஜித் தற்போது வெளிநாட்டில் இருப்பதால், ‘விடாமுயற்சி ‘ படக்குழுவில் எப்போது இணைவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் மாஸ்டர் மற்றும் லியோ படத்தை எடுத்திருக்கிறார். அடுத்ததாக விக்ரம் 2, கைதி 2, ரஜினி படம் என லயன் அப்பில் எக்கச்சக்க படங்கள் இருக்கிறது. இந்த சூழலில் இன்னும் லோகேஷ் 10 படங்கள் மட்டும் தான் பண்ணுவேன் என்று சமீபத்தில் கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த பத்து படங்களில் அஜித் இடம் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அஜித்தின் படத்தை நீங்கள் இயக்குவீர்களா என்று கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு கொஞ்சமும் யோசிக்காமல் லோகேஷ் ஒரு பதில் அளித்துள்ளார்.

அதாவது கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் அஜித் படத்தை இயக்குவேன் என்று கூறி இருக்கிறார். தற்போது வரை லோகேஷின் ஹீரோக்கள் வரிசையில் கார்த்தி, கமல், விஜய் சூர்யா போன்ற பல பிரபலங்கள் இணைந்துள்ளார்கள். அடுத்ததாக ரஜினியும் விரைவில் இந்த லிஸ்டில் இடம்பெற இருக்கிறார்.

இப்போது அஜித்தும் லோகேஷ் படத்தில் இணைவார் என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருக்கிறது. மேலும் இவருடைய படங்களில் தொடர்ச்சியாக நடிகர்கள் நடித்து வருகிறார்கள். ஆகையால் விஜய், அஜித் இருவரும் ஒன்றாக நடித்து கிட்டத்தட்ட பல வருடங்கள் ஆகிவிட்டது. இவர்கள் இருவரையும் சேர்த்து நடிக்க வைக்க இயக்குனர்கள் முயற்சி செய்தனர்.இயக்குனர் வெங்கட் பிரபுவும் இதற்கான முயற்சியில் இறங்கி இருந்தார். ஆனால் அது கை கூடாத நிலையில் லோகேஷ் அஜித்தை வைத்து இயக்கினால் கண்டிப்பாக அதில் விஜய் இடம் பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி இருவரும் மீண்டும் ஒன்றாக நடித்தால் வேற லெவலில் இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

இது தவிர தனது நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்து வைத்திருக்கும் இவர் அடுத்தாக விடாமுயற்சி என்னும் திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்பொழுது சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கே ரசிகர்கள் அவரை வைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருவதைக் காணலாம்.அண்மையில் விஜய்யும் சென்னை ஏர்போட்டிற்கு வந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை பற்றி முக்கிய தகவல் ஒன்று வெளியாக உள்ளது அதுஎன்னவென்றால் சர்வேதச உளவாளி பற்றி அடிப்படையாக கொண்டு க்ரைம் – த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்தப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது சில முக்கியமான காட்சிகள் மற்றும் பாடல்கள் ஐரோப்பா முழுவதும் உள்ள கவர்ச்சியான இடங்களில் பதிவு செய்யப்படும் என்று ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ‘ஜி’, ‘கிரீடம்’, ‘மங்காத்தா’ மற்றும் ‘என்னை அறிந்தால்’ படங்களுக்குப் பிறகு அஜித்துடன் ஐந்தாவது முறையாக இணைந்துள்ள ‘விடா முயற்சி’ படத்தில் த்ரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். தமிழில் ‘விடாமுயற்சி’ என்று பொருள்படும் ‘விடா முயற்சி’க்கு ‘முயற்சிகள் தோல்வியடையாது’ என்ற டேக்லைன் உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது திரைக்கு வர உள்ளது. பைக் ஓட்டுவதில் நாட்டம் கொண்ட அஜித், இப்படத்திற்கான வேலைகளை முடித்துவிட்டு நவம்பர் மாதம் உலக அளவில் பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்