அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே மிஷ்ரா வருகின்ற ஜூலை 31ஆம் தேதிக்குப் பிறகு பதவியில் தொடரக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு முறையிட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது
இந்த மனு குறித்து உச்சநீதிமன்றத்தில் நாளை (ஜூலை 27) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தகவல் அளித்துள்ளது. இந்நிலையில், கடந்த 2021 மற்றும் 2022ல் மிஷ்ராவுக்கு வழங்கப்பட்ட பதவி நீட்டிப்புகள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது
- Advertisement -