கடந்த 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீரின் கார்கில் பகுதியில் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்தனர். இதனால் இந்திய ராணுவத்துக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த போரில், இந்தியா வெற்றி பெற்று கார்கிலை மீட்டது.
இந்நிலையில், இந்த போரின் போது இந்தியத் தரப்பில் சுமார் 543 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். மே மாதம் தொடங்கிய இந்த கார்கில் போர் ஜூலை 26ல் நிறைவுக்கு வந்த நிலையில், இந்த வெற்றி நாள் விஜய் திவாஸ் என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, இந்த வெற்றி நாளை ஆண்டுதோறும் கார்கில் வெற்றி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- Advertisement -