தமிழ் திரையுலகின் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சமீபத்தில் யூடியூப் நேர்காணலில் பங்கேற்றியுள்ளார். அதில், அவர் மதமாற்றம் குறித்த கேள்வி கேட்டபோது “இஸ்லாமிய மதத்திற்கு மாறும்போது எந்த விதமான சமூக அழுத்தத்தையும் நான் எதிர்கொள்ளவில்லை. இந்தியர்கள், குறிப்பாக தென்னிந்தியர்கள் அனைவரையும் அரவணைத்து வாழும் தன்மை மற்றும் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்” என்றார்.
மேலும், அவர் ” ‘வாழு, வாழவிடு’ என்ற கோட்பாட்டின்படி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்பவர்கள் ஆனால், அரசியல் சூழல் காரணமாக, சில ஆண்டுகளாக நாட்டில் வித்தியாசமான சூழல் நிலவுவதை உணர்கிறேன்” என ஓபனாக பேசியுள்ளார்
- Advertisement -