அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் ஆட்கொணர்வு மனு குறித்த மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை தொடங்கியது . இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அவர்கள் ”அமலாக்கத்துறை காவல் அதிகாரிகள் கிடையாது. அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி கைது நடவடிக்கை மேற்கொள்ள முடியும். சுங்க அதிகாரியால் ஒருவரைக் கைது செய்ய முடியுமா என்றால் முடியாது” என வாதம் வைத்துள்ளார்.
மேலும், அவர் ” இங்க சுங்க அதிகாரி சம்மந்தப்பட்ட நபரைப் பிடித்து காவல்துறையில்தான் ஒப்படைக்க முடியும். இது அமலாக்கத்துறைக்கும் பொருந்தும்” எனத் தொடர் வாதத்தில் ஈடுபட்டு வருகிறார்
- Advertisement -