காஷ்மீர், சென்னை, கொடைக்கானல் மற்றும் பிற இடங்களில் 125 நாட்கள் பரபரப்பான படப்பிடிப்பிற்குப் பிறகு தளபதி விஜய்யின் ‘லியோ’ இப்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேங்ஸ்டர் படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகிறது.’லியோ’ ஏற்கனவே முன்னணி ஜோடியான விஜய் மற்றும் த்ரிஷாவுடன் முன்னணி நடிகர்களின் குழுமத்தை கொண்டுள்ளது. சஞ்சய் தத், ஜோஜு ஜார்ஜ், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, சாண்டி, ஏஜென்ட் டினா வசந்தி மற்றும் பலர் இதில் அடங்குவர்.
என்ன கதை இந்தச் சூழலில் லியோ படத்தின் கதை இதுதான் என இணையத்தில் தகவல் ஒன்று பரவிவருகிறது. அதாவது, காஷ்மீரில் பேக்கரி மற்றும் காபி ஷாப் ஒன்றை விஜய் வைத்து தனது மனைவி மற்றும் மகளுடன் விஜய் நிம்மதியாக வாழ்ந்துவருகிறார். விஜய்யும், த்ரிஷாவும் கணவன் மனைவியாக படத்தில் நடித்திருக்கிறார்கள். விஜய்க்கு படத்தில் பெயர் பார்த்திபன். அப்போது ஒரு பெரிய மாஃபியா கேங்கால் பிரச்னை ஏற்படுகிறது. அவர்களுடன் விஜய் மோதும்படி சூழல் உருவாகி மோதலும் நடக்கிறது.
முன்னாள் எதிரிகள்: இதற்கிடையே விஜய்க்கும் ஏற்கனவே ஒரு கேங்குக்கும் பிரச்னை இருக்கும். அவர்களிடமிருந்து தனது அடையாளத்தை மறைத்துதான் காபி ஷாப் வைத்திருப்பார். ஆனால் தற்போது ஏற்பட்டிர்க்கும் புதிய பிரச்னையால் விஜய்யின் இருப்பிடம் அவரின் முன்னாள் எதிரிகளுக்கும் தெரியவரும். அப்போது ஃபிளாஷ்பேக் ஒன்று செல்லும். அதனைத் தொடர்ந்து இரண்டு கேங்குகளையும் விஜய் எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை என்ற தகவல்தான் இணையத்தில் தீயாக பரவிவருகிறது.முடிந்த ஷூட்டிங்: காஷ்மிரில் தொடங்கிய ஷூட்டிங் சென்னை மற்றும் திருப்பதியில் நடந்தது. சமீபத்தில்தான் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்தது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் விஜய் டப்பிங்கையும் இன்னும் சில நாட்களில் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தின் இசை வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் நடக்கலாம் என்றும் தெரிகிறது.
தற்போது ‘லியோ’ படத்தில் நடிகரும் இயக்குனருமான ராமகிருஷ்ணனும் சிறிய ஆனால் குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. ‘கோரிபாளையம்’ போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் ராமகிருஷ்ணன். ‘ ‘போங்கடி நீங்கலும் உங்க காதலும்’ (இயக்குனர்) மேலும் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கிய பிளாக்பஸ்டர் ஹிட் ‘மாமன்னன்’ படத்தில் உதயநிதியின் நண்பராக தோன்றினார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள ‘லியோ’ படத்திற்கு அனிருத்தின் இசையும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவும், பிலோமின் ராஜ் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் பிரம்மாண்டமான வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.