மணிப்பூர் சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து நேற்று (ஜூலை25) தென்காசியில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர், அப்போது இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டச் செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்றுப் பேசினார்.
அந்த சமயம், அங்கிருந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவி தமிழ்ச்செல்வி என்பவருக்கும், இவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.திமுக மேலிடம் இவ்விருவரிடம் தீவிரமாக விசாரிக்கப்பட்ட பின் சிவபத்மநாதனை அப்பொறுப்பிலிருந்து நீக்கி கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- Advertisement -