பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஜூலை 25) தனது 85வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதில், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் “இன்று 85வது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ்-க்கு வாழ்த்துகள்; இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும் தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்” என பாமக தலைவர் ராமதாஸை வாழ்த்தினார்
இந்நிலையில், தற்போது ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு காலை முதலே ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் #DrRamadossAyya85, #மருத்துவர்அய்யா85 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
- Advertisement -