தமிழகத்தில் ஆவின் பொருட்களின் விலை அவ்வப்போது விலை ஏற்றம் கொண்டுவரப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள ஆவின் விற்பனையகங்களில், பன்னீர் , பாதாம் மிக்ஸ் பொருட்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
அதன்படி, இந்த விலை உயர்வு இன்று (ஜூலை 25) முதல் தமிழகமெங்கும் அமலுக்கு வருகிறது. இந்த ஆவின் பால் பொருட்களின் விலை ரூ.20 முதல் ரூ.100 வரை உயர்த்தி ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒரு கிலோ பன்னீர் ரூ.450க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.550 ஆக உயர்ந்துள்ளது. அதைப்போல், பாதாம் மிக்ஸ் ரூ. 100லிருந்து ரூ. 120க்கு விற்கப்படுகிறது
- Advertisement -