தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள், ” வடகிழக்கு மாநிலங்களின் சூழல், வலுவற்ற தன்மை கொண்டதாக உள்ளது. மணிப்பூரில் நடக்கும் வன்முறை பிற மாநிலங்களுக்கும் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த எல்லைகளைக் கொண்ட மாநிலங்களுக்கு இது நல்ல சூழல் கிடையாது” என்றார்.
மேலும், அவர் ”பிரதமர் மோடி தனது அகங்காரத்தை விடுத்துவிட்டு, நாட்டிற்கு நம்பிக்கை அளிக்கும் விதமாகச் செயல்பட வேண்டும். மணிப்பூரில் அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும், அங்கு எப்போது அமைதி திரும்பும் எனவும் பிரதமர் மோடி விளக்க வேண்டும்” எனத் தொடர்ந்து வலியுறுத்தும் விதமாகப் பேசி வருகிறார்
- Advertisement -