அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடங்கியது. இந்த மனு குறித்த விசாரணையை நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வு விசாரிக்கிறது. இந்நிலையில், ஏற்கனவே 3வது நீதிபதி கார்த்திகேயன் அவர்கள், நீதிபதி சக்ரவர்த்தி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவல் எடுத்து விசாரிக்கலாம் என அளித்த தீர்ப்பை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜியை எப்போதிலிருந்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்பது குறித்து விசாரணையும், செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி உள்ளனர். இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுக்க அதிகாரம் இல்லை என்ற எனது தீர்ப்பில் உறுதியாக உள்ளேன் என நீதிபதி நிஷா பானு அவர்கள் மீண்டும் உறுதிப்படக் கூறியுள்ளார். ஆகவே, அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கட்டும் என ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்து நீதிபதி நிஷா பானு அறிவித்துள்ளார்
- Advertisement -