பொதுமக்கள் தங்களது முன்பதிவுக்காகப் பயன்படுத்தும் IRCTC இணையதளம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று இந்த ரயில் டிக்கெட் முன்பதிவு இணையதளமான IRCTC திடீரென முடங்கியது. இதனால், நாளை ரயிலில் பயணம் செய்ய விரும்புவோர், தட்கல் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த முடக்கம் குறித்து ரயில்வே நிர்வாகம்,”இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தற்காலிகமாக முடக்கம் எனவும் அதனை விரைவில் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் , முன்பதிவிற்கு Ask disha, Make my trip, Amazon போன்ற இணையதளங்கள்/செயலிகள் மூலமாக பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள் ” எனத் தெரிவித்துள்ளது
- Advertisement -