தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 25) ஆன்லைனில் சற்றுமுன் தொடங்கியது. தற்போது, இங்குத் தொடங்கும் இந்த கலந்தாய்வு வருகின்ற ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, http://tnmedicalselection.org மற்றும் http://tnhealth.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் பங்கேற்றி வருகின்றனர்
மேலும், இந்த கலந்தாய்வில் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சுமார் 40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, இந்த கலந்தாய்வு இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், கலந்தாய்வு முடிவுகள் ஆகஸ்ட் 3ம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Advertisement -