மேற்கு திசை காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் சில இடங்களில் இன்றும், நாளையும் இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (ஜூலை 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதைப்போல், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது
- Advertisement -