மேற்கு இந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட் தொடர்களிலும், 3 ஒரு நாள் போட்டிகளிலும், 5 டி20 தொடர்களிலும் விளையாட உள்ளது. இந்நிலையில், தற்போது டெஸ்ட் தொடரில் மேற்கிந்தியத் தீவு அணிகளுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது
தற்போது 2 டெஸ்ட் தொடரில் முதலில் விளையாடிய இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. இதையடுத்து 439 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்தியத் தீவு அணி தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வதுடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக (12.2 ஓவர்) 100 ரன்களை கடந்த அணி என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளது இந்திய அணி. இதற்குமுன் 2001ல் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 13.2 ஓவரில் 100 ரன்களை விளாசி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -