சீனாவின் வட கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு பள்ளியின் உடற்பயிற்சி கூடத்தில் திடீரென எதிர்பாராத விதமாக மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அங்கு விளையாடிக் கொண்டிருந்த மாணவிகள் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், அங்கு சில மாணவிகள் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக, இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் தெரிவித்தனர். அதேசமயம், இந்த உடற்பயிற்சி கட்டடத்தைக் கட்டிய உள்ளூர் கட்டட நிறுவனத்தின் தலைவரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
- Advertisement -