மணிப்பூர் விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி பதிலளிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், மாநிலங்களவையிலிருந்து ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் திடீரென சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஏனென்றால், இவர் மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடும் அமளியில் ஈடுபட்டதாக சஞ்சய் சிங்கை இந்த மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் சற்றுமுன் அறிவித்துள்ளார். மேலும், இந்த மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவித்தார்
- Advertisement -