பெங்களூரில் வசித்து வரும் பாஸ்கர் – சிந்துஜா என்ற தமிழ்நாடு தம்பதியுடன் 5 பேர் கொண்ட கும்பல் பெங்களூரில் தக்காளியை ஏற்றி வந்த லாரியை கடத்தி, அந்த தக்காளி விவசாயி மற்றும் ஓட்டுநரைத் தாக்கியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும், இந்த தம்பதி சென்னை புறநகரில் இந்த தக்காளியை விற்று, மீண்டும் பெங்களூரு திரும்பியபோது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சினிமா பாணியில் அந்த விவசாயியைத் தாக்கி 2 டன் தக்காளியைக் கடத்தி, சென்னை புறநகரில் சுமார் 1.5 லட்சத்துக்கு விற்றுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 3 பேருக்கு போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
- Advertisement -