வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையில், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும், இந்த வங்கக்கடல் பகுதியில் உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வரும் ஜூலை 26ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால், அப்பகுதியில் மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
- Advertisement -