கடந்த 1996 ஆம் ஆண்டில் இயக்குநர் ஷங்கர் இயக்கி, உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த இந்தியன் திரைப்படம் பிரமாண்டமாக வெற்றி பெற்றிருந்தது. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாகமான இந்தியன் -2 உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது. மேலும், இப்படத்திற்கு இயக்குநர் ஷங்கர் இயக்கியும் , இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்..
இந்நிலையில், தற்போது கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தில் 6 மணி நேரத்திற்கும் மேல் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளதால், அதை 3 மணி நேரக் காட்சிகளைக் கட் செய்யாமல் அதனை மற்றொரு பாகமாக எடுக்கப் படக்குழு திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்த ‘இந்தியன்-3’ உருவாகும் பட்சத்தில், கமல்ஹாசனை வைத்து இன்னும் சில காட்சிகளைப் படமாக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது
- Advertisement -