ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று உள்ளது. தற்போது 2வது டெஸ்ட் தொடரின் நாலாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய இந்திய வீரர் இஷான் கிஷன், ‘RP17′ என எழுதப்பட்ட ரிஷப் பண்ட்-ன் பேட்டை வைத்து பேட்டிங் செய்தது தெரிய வந்துள்ளது. இவர் ரிஷப் பண்ட் ஸ்டைலில் ஒற்றை கையால் சிக்ஸர் அடித்து அரைசதத்தைப் பூர்த்தி செய்தார் இஷான். தற்போது இந்த பேட் குறித்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது
- Advertisement -