மகாராஷ்டிரா மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாகக் கடந்த சில வாரங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் என்ற பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அங்குச் சென்ற பேரிடர் மீட்புப் படையினர் அறிவித்துள்ளனர்.
மேலும், இங்குப் பெய்து வரும் பலத்த மழைக்கு இடையே மீட்புப் பணி தொடர்ந்து வரும் நிலையில், இதுவரை 27 பேர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். அதேசமயம், 57 பேரைத் தேடும் பணி தொடர்ந்து வருகிறது. அப்பகுதியில் மொத்தம் இருந்த 48 வீடுகளில் 17 வீடுகள் மண்ணில் புதைந்தன என அதிர்ச்சி தகவல் வந்துள்ளது.
- Advertisement -