வளிமண்டலத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழகத்தில் உள்ள 5 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு என்றும், நீலகிரி மற்றும் கோவையில் இன்று மிகக் கனமழைக்கும், திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது
அதேசமயம் , வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. இதனால் வட மாநிலங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிகக் கனமழை தொடரும். ஒடிசா, கோவா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் நாளை (ஜூலை 25) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Advertisement -