இந்தியாவில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி குறித்து சென்னையில் பேட்டியளித்த பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், “தற்போது தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. கூட்டணியில் இல்லாததால் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக்கு பாஜக தங்களை அழைக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார். மேலும், இந்தியா கூட்டணி தலைவர்களிடையே பல முரண்பாடு உள்ளது” எனக் கூறினார்.
மேலும், நடிகர் விஜய் அரசியல் குறித்த நிருபர்களின் கேள்விக்கு பிரேமலதா விஜயகாந்த், ” விஜயகாந்த்தைப் போல அரசியலில், நடிகர் விஜய் வரமுடியுமா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு. விஜய் மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கியது நல்ல விஷயம். அவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்” எனப் பதிலளித்துள்ளார்
- Advertisement -