இங்கிலாந்தில் நடைபெறும் வரும் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணி மோதி வருகின்றனர். இந்நிலையில், இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி 2 வெற்றியும், இங்கிலாந்து அணி 1 வெற்றியும் பெற்றிருந்தது
தற்போது, இந்த 4வது டெஸ்ட் போட்டி லண்டனில் நடைபெற்று வந்த போது, அப்போட்டியின் இறுதி நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது. இதனால், இப்போட்டி டிரா செய்யப்பட்டது. இதன் காரணமாக, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்த ஆஷஸ் போட்டியை தக்க வைத்தது பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி. அதேசமயம், கடந்த 2015ஆம் ஆண்டில் இந்த ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -