- Advertisement -
இந்திய அணிக்கு எதிரான மேற்கிந்திய அணிகளின் 2வது டெஸ்ட் போட்டி 2வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது. தற்போது பேட்டிங்கில் விராட் கோலி விளையாடி வருகிறார். இந்நிலையில், ஸ்டம்ப் மைக்கில் பதிவான விராட் கோலி, மே.இ.தீவுகள் கீப்பர் சில்வா இடையான உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், “விராட் கோலிக்காக போட்டியை காண வருகிறேன் என எனது தாயார் ஃபோன் செய்து என்னிடம் கூறினார். என்னால் அதை நம்பவே முடியவில்லை. சீக்கிரம் சதம் அடிங்கள் விராட். நீங்கள் சதமடிப்பதை பார்க்க வேண்டும் என நான் ஆசைப்படுகிறேன்” என கூறிய ஆடியோ ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியப்படுத்தி உள்ளது
- Advertisement -