அமெரிக்காவில் உள்ள நெவாடா என்ற பகுதியைச் சேர்ந்த 2 வயது சிறுவனுக்கு, மூளையைத் தின்னும் அமீபா நோய்க்குத் தாக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சிறுவனுக்குக் கடந்த ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவனது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என மருத்துவர்கள் கவலையாகத் தெரிவித்தனர்.
மேலும், இந்த அமீபா நோய்த் தொற்று பொதுவாக இந்த அசுத்தமான நீரில் வாழும் ‘நெல்லேரியா பவுலேரி’ என்ற அமீபா தொற்றாகும். இது மனிதர்களின் உடலுக்குள் புகுந்து மூளையில் உள்ள திசுக்கள், நரம்புகளை நேரடியாகத் தாக்குகிறது என்றனர்
- Advertisement -