சென்னையில் உள்ள அம்பத்தூரில் நடுரோட்டில் அஜய் என்ற நபர் தனது நண்பர்களுடன் பிறந்தநாள் முன்னிட்டு கேக் வெட்டும் போது, அவ்வழியே சென்ற ஆட்டோ ஓட்டுநர் காமேஷ், வழிவிடக் கூறியதால் இருதரப்புக்கும் மோதல் வெடித்தது. இதில் காமேஷை, அஜய் மற்றும் அவருடன் இருந்தவர்கள் வெட்டிக்கொலை செய்து தப்பியோடியுள்ளனர்
அப்போது, காமேஷுடன் வந்த அவரது சகோதரர் சதீஷ் என்பவருக்கும் சில வெட்டுக் காயங்களுடன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தப்பியோடிய அந்த நபர்களை அம்பத்தூர் போலீசார் தற்போது தீவிரமாகத் தேடி வருகின்றனர்
- Advertisement -