பிரதமர் மோடி கடந்த 2 ஆண்டுகளில் சென்ற 12 வெளிநாட்டுப் பயணங்களுக்கு ரூ.30 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்துள்ள ஒன்றிய அரசு, ‘கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களின் விளம்பர செலவுகளுக்காக ரூ.2,700 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளது.
அதைப்போல், கடந்த 2018 முதல் நடப்பாண்டு ஜூலை 13ம் தேதி வரை, ஒன்றிய அரசின் விளம்பரத்திற்காக சுமார் 3064.42 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒளிபரப்புத்துறை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் பதிலளித்துள்ளார்
- Advertisement -