டெல்லியில் இன்று நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடி அவர்கள் மணிப்பூர் சம்பவம் குறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். அதில், அவர் “பிரதமர் மோடி அவர்களே, மணிப்பூர் கொடூரம் குறித்து நீங்கள் நேற்று நாடாளுமன்றத்தில் பேசவில்லை.உண்மையிலேயே உங்களுக்குக் கோபம் வந்திருந்தால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் குறித்து பொருத்தமற்ற ஒப்பீடு செய்வதற்குப் பதிலாக, மணிப்பூர் முதலமைச்சரை நீக்கியிருக்க வேண்டும். ” என்றார்.
மேலும், அவர் ” இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விரிவான விளக்கம் வழங்க வேண்டும் என ‘INDIA’ எதிர்பார்க்கிறது. ஒற்றைச் சம்பவம் குறித்து மட்டுமில்லாமல், 80 நாட்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநிலத்திலும் ஒன்றியத்திலும் உங்களது அரசு என்ன செய்கிறது என விளக்க வேண்டும்” என’காங்கிரஸ் தலைவர் கார்கே தனது காட்டமாகக் கூறியுள்ளார்.
- Advertisement -